ஜூலை மாதம்11 தேதி திருவிழா
புனித பெனடிக்ட்
(480 - 543 )
இறப்பு 543 (அகவை 63
ஆண்டு 480 ல் அம்பிரியாவில் ஒரு உன்னத இத்தாலிய குடும்பத்தில் பிறந்தார்
ஒரு சிறுவனாக இருந்த பொது அவர், நல்லொழுக்கத்தை கடைபிடித்தார். அவரது நடவடிக்கைகள் நல்ல முதிர்ச்சி இருந்தது.
அவர், ஏழு வயதில் ரோம் அனுப்பப்பட்டு பொது பள்ளிகளில் கல்வி பயின்றார்.
தனது பதினான்கு வயதில், ரோமன் இளைஞர்கள் மூலம் எச்சரிக்கப்பட்டு ரோம் இருந்து நாற்பது மைல்கள் தொலைவுள்ள Subiaco வின் பாலைவன மலைகளுக்குள்ளாக தப்பி பரிசுத்த ஆவியானவர் மூலம் வழிநடத்தப்பட்டு ஒரு குகையை அடைந்தார், அதுவே பின்னர் புனித குகை என அழைக்கப்படுகிறது.
அவர், மூன்று ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார்
இத்தாலியில், உரோமைக்கு 40 மைல்s (64 கிமீ) கிழக்கே உள்ள சிபாய்கோ என்னும் இடத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் ஊள்ள மோன்தே கசினோவில் உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதியைக் கழித்தார்.
பெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒருமுறை இவரை கொல்ல இவர் குடிக்கும் பாத்திரத்தில் விஷம் கலக்கப்பட்திருந்தது இவர் அந்த பத்திரத்தில் சிலுவை அடையாளம் வரைந்தபோது அந்த பாத்திரம் உடைந்து கீழே விழுந்தது.
அவர் இறப்பதற்கு ஆறு நாட்கள் முன்னதாக அவர் காய்ச்சலிருந்த போதே அவரது கல்லறையை தயார் செய்ய உத்தரவிட்டார் ஆறாவது நாளில் 543 மார்ச், 21 அன்று, அவர் தேவாலயத்தில் எடுத்து செல்லப்பட்டு திருவிருந்தில் பங்குபெற்றபின் ஜெபத்தினூடே அவர் அமைதியாக காலமானார்
பாதுகாவல் - நஞ்சினால் பாதிக்கப்பட்டோர், பில்லி சூனியத்திலிருந்து தப்ப, உழவர், பொற் கொல்லர், மரண படுக்கையில் இருப்போர்,
ஐரோப்பா மற்றும் மாணவர்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவர் ஆவார்.
No comments:
Post a Comment