Thursday, August 29, 2013

ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு என்ன நடக்கும்?

ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு என்ன நடக்கும்? 


ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பினும், கிறிஸ்தவன் அல்லாதவனாயிருப்பினும், அவன் தன் ஜீவனை மாய்த்துக்கொள்வதோ, அல்லது மற்றொருவனுடைய ஜீவனை மாய்ப்பதோ கொலைபாதகமாகும். “மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது” (1யோவான் 3.15)

யூதாஸ்கரியோத்து கார்த்தராகிய இயேசுவை காட்டிக் கொடுக்கும் முன்னர் சாத்தான் அவனுக்குள் புகுந்தான் என்பது வேதவாக்கியங்களின் மூலம் தெளிவாயிருக்கிறது (யோவான் 13.27) அதன் பலனாக அவன் தற்கொலை செய்து கொண்டான். தன் ஜீவனை தானே மாய்த்துக் கொள்கிறவன் யூதாஸ்கரியோத்தைக் காட்டிலும் எவ்விதத்திலும் மேலானவன் அல்ல.

சிலர் மதியீனமாகச் சிந்திக்கிறது போல, தற்கொலை செய்து கொள்வது பரலோகத்திற்கு செல்வதற்கான ஒரு குறுக்கு வழி அல்ல. “என்னுடைய எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்” என்பது அவர்களது எண்ணம். ஆனால் உண்மையில் அவர்கள் “பொரிக்கஞ் சட்டிக்குள்ளிருந்து அக்கினிக்குள்” அதுவும் அக்கினிக் கடலுக்குள்தான் குதிக்கிறார்கள். மறுபடியும் பிறந்த எந்த உண்மையான கிறிஸ்தவனும், தன் ஜீவியத்தை இவ்விதம் முடித்துக்கொண்ட பின், தான் பரலோகத்தில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று ஒரு போதும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

வேதாகமத்தில் தற்கொலை புரிந்து கொண்ட ராஜாவாகிய சவுல், அகித்தோப்பேல், யூதாஸ்காரியோத்து போன்றவர்கள் அனைவருமே பயங்கரமான பின்மாற்க்கரராயிருந்தனா். பாவியான ஒருவன் தற்கொலை செய்து கொண்டால் அவன் நரகத்திற்கு செல்லுகின்றான். ஆனால் மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்து கொண்டால் அவன் அதைக் காட்டிலும் மிக மோசமன இடத்திற்குச் செல்லுகின்றான்; அவன் பின்மாற்றக்காரருக்கென வைக்கப்பட்டுள்ள புறம்பான இருளுக்குச் செல்வான். நரகத்திலுள்ளதைப் பார்க்கிலும் அதிக வேதனையும் அழுகையும் பற்கடிப்பும் அங்கே இருக்கும். (மத்தேயு. 18.12)

தேவன் கிருபையுள்ளவரும், மனதுருக்கமுள்ளவரும், மன்னிக்கிறவருமாயிருக்கிறார் என்பது உண்மையே. உயிரோடிருக்கையில், எந்தவொரு நபரும் ஏதேனும் ஒரு பாவத்தைக் குறித்து மெய்யாக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினால், அவன் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வான். ஆனால் ஒருவன் தற்கொலை செய்து கொண்டால், அவனுக்கு மனஸ்தாபப்படுவதற்கும் தேவனிடத்தில் திரும்புவதற்கும் சந்தர்ப்பமே இராது. தற்கொலை முயற்சியை மேற்கொள்ளும் சிலருடைய விஷயங்களில், அவர்கள் ஒரு வேளை உடனடியாக மரிக்காமல் போகக் கூடும் அவர்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி கர்த்தரிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ள ஒரு தருணம் கிடைக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் அபூர்வமனவையே!

ஒரு வேளை இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீ தற்கொலை செய்யும் படி தூண்டப்பட்டிருக்கக் கூடும். அருமையான நண்பனே, உன்னுடைய ஆத்துமா நித்திய வேதனையை அனுபவிக்கப் போவது மட்டு மல்லாது, இவ் வெட்ககரமான, பாவச் செயலின் நிமித்தம் கர்த்தருடைய நாமமும் அதிகமாகத் தூஷிக்கப்படும்.

இன்று கிருபையுள்ள கர்த்தர், “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவா்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்க இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறி, உன்னை அழைக்கிறார். (மத்தேயு. 11.28). அவர் உன்மேல் கரிசனையுள்ளவராய், உன்னை விசாரிக்கிறவராயிருக்கிறபடியால் உன் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடு..

தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். தாவீது, “நான் கர்த்தரை தேடினேன், அவர் எனக்கு செவிகொடுத்து, என்னுடைய எல்லா பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்”. (சங்கீதம். 34.4) என்று சாட்சி பகருகிறான். கர்த்தராகிய இயேசுவுக்கு நீ உன் இருதயத்தை திறந்து கொடுப்பாயாக. அவர் உன் வேதனையை விளங்கிக் கொள்ளுகிறவராயிருக்கிறார். அவர் நல்ல சமாரியராயிருக்கிறார். அவர் உன் காயங்களையெல்லம் கட்டுவார்.

தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்கு நீ இடங்கொடுத்ததைக் கர்த்தர் கிருபையாய் உனக்கு மன்னித்து, உனக்கு புதியதொரு வாழ்க்கையைத் தந்தருளும்படி அவரிடத்தில் தயவாய் மன்றாடுவாயாக. “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (11கொரி. 5.17)

“கிறிஸ்தவ வாழ்வின் 50 கடினமான கேள்விகளுக்கான பதில் எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பதில்கள்..

Monday, August 26, 2013

தமிழகத்தின் முதல் வேதசாட்சி தேவ சகாயம் பிள்ளை (Blessed Devasahayam Pillai)


தமிழகத்தின் முதல் வேதசாட்சி தேவ சகாயம் பிள்ளை



பிறப்பு - ஏப்ரல் 27,1712
இறப்பு - ஜனவரி 14, 1752
திருநாள் - ஜனவரி 14 

St. Gonsalo Garcia, the first Indian saint


இந்திய மண்ணின் முதல் புனிதர்  - புனித கொன்சாலோ கார்சியஸ்



பிறப்பு - 1556

இறப்பு - 5 பிப்ரவரி 1597

திருநாள் - பிப்ரவரி 5


Saturday, July 27, 2013

தாய்மார்களின் பாதுகாவலர் - புனித மோனிகா "Guardian of mothers - St. Monica"


தாய்மார்களின்  பாதுகாவலர் - புனித மோனிகா



Guardian of mothers - St. Monica7

திருமணமான பெண்களின் பாதுகாவலர் - புனித மோனிகா "Guardian of a married woman - St. Monica"


திருமணமான பெண்களின்  பாதுகாவலர் - புனித மோனிகா



Guardian of a married woman - St. Monica

மாலுமிகளின் பாதுகாவலர் - புனித டாலன்மைன் நிக்கோலஸ்"Guardian of sailors - St. Nicholas talanmain"


மாலுமிகளின்  பாதுகாவலர்



புனித டாலன்மைன் நிக்கோலஸ்

St. Nicolas Patron Saint of Sailors

Guardian of sailors - St. Nicholas talanmain

தாதியர்களின் பாதுகாவலர் - புனித அலெக்ஸான்டிரிய கத்ரீன் "Guardian of nurses - St. aleksantiriya katrin"

தாதியர்களின்  பாதுகாவலர் - புனித அலெக்ஸான்டிரிய   கத்ரீன்



Guardian of nurses - St. aleksantiriya katrin

காதலர்களின் பாதுகாவலர் - புனித வாலண்டைன் "Lovers of the Guard - St. Valentine"

காதலர்களின் பாதுகாவலர் - புனித வாலண்டைன்


Lovers of the Guard - St. Valentine

Monday, July 8, 2013

ஜூலை 11 திருச்சபை கொண்டாடும் புனிதர்

ஜூலை மாதம்11  தேதி  திருவிழா 


புனித பெனடிக்ட்

(480 - 543 )
இறப்பு 543 (அகவை 63

ஆண்டு 480 ல் அம்பிரியாவில் ஒரு உன்னத இத்தாலிய குடும்பத்தில் பிறந்தார்
ஒரு சிறுவனாக இருந்த பொது அவர், நல்லொழுக்கத்தை கடைபிடித்தார். அவரது நடவடிக்கைகள் நல்ல முதிர்ச்சி இருந்தது.
அவர், ஏழு வயதில் ரோம் அனுப்பப்பட்டு பொது பள்ளிகளில் கல்வி பயின்றார்.
தனது பதினான்கு வயதில்,  ரோமன் இளைஞர்கள் மூலம் எச்சரிக்கப்பட்டு ரோம் இருந்து நாற்பது மைல்கள் தொலைவுள்ள Subiaco வின் பாலைவன மலைகளுக்குள்ளாக தப்பி பரிசுத்த ஆவியானவர் மூலம் வழிநடத்தப்பட்டு ஒரு குகையை அடைந்தார், அதுவே பின்னர் புனித குகை என அழைக்கப்படுகிறது.
அவர், மூன்று ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார்

இத்தாலியில், உரோமைக்கு 40 மைல்s (64 கிமீ) கிழக்கே உள்ள சிபாய்கோ என்னும் இடத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் ஊள்ள மோன்தே கசினோவில் உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதியைக் கழித்தார்.
பெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்.

ஒருமுறை இவரை கொல்ல இவர் குடிக்கும் பாத்திரத்தில் விஷம் கலக்கப்ட்திருந்தது இவர் அந்த பத்திரத்தில் சிலுவை அடையாளம் வரைந்தபோது அந்த பாத்திரம் உடைந்து கீழே விழுந்தது.
அவர் இறப்பதற்கு ஆறு நாட்கள் முன்னதாக அவர் காய்ச்சலிருந்த போதே அவரது கல்லறையை தயார் செய்ய உத்தரவிட்டார் ஆறாவது நாளில்  543 மார்ச், 21 அன்று, அவர் தேவாலயத்தில் எடுத்து செல்லப்பட்டு திருவிருந்தில் பங்குபெற்றபின் ஜெபத்தினூடே அவர் அமைதியாக காலமானார்

பாதுகாவல் - நஞ்சினால் பாதிக்கப்பட்டோர், பில்லி சூனியத்திலிருந்து தப்ப, உழவர், பொற் கொல்லர், மரண படுக்கையில் இருப்போர்,
ஐரோப்பா மற்றும் மாணவர்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவர் ஆவார்.


ஜூலை 9 திருச்சபை கொண்டாடும் புனிதர்

அகஸ்டீன் ஜாவோ ராங் மற்றும் அவரது 119 துணைவர்கள்

புனிதர்கள் மறைப்பணியாளர்



சீனாவின் தியாகிகள் / புனிதர்கள்
தோழர்கள்மறைச்சாட்சியர்
இறப்பு 1648-1930

கிறித்துவம் 600s  சிரியா வழியாக  சீனாவில் பரவியது. சீனாவை  பொறுத்தமட்டில் கிறித்துவம் இரகசியமாக செயல்பட வேண்டிய  கட்டாயத்தில் இருந்தது.

அகஸ்டீன் ஜாவோ ராங்  குழுவில் 120 தியாகிகள் 1648 மற்றும் 1930 இடையே கொல்லப்பட்டனர். அவர்களில்

எண்பத்து ஏழு பேர் சீனர்கள் அவர்களில்  சிறுவர்கள், பெற்றோர்கள், catechists மற்றும் தொழிலாளர்கள்,
வயது ஒன்பது ஆண்டுகள் இருந்து எழுபத்தி இரண்டு வரை.  இந்த குழுவில்  நான்கு சீன மறைமாவட்ட குருக்கள் அடங்கும்.

முப்பத்தி மூன்று வெளிநாட்டவர் அவர்களில்  பெரும்பாலும் போதகர்கள் மற்றும் பெண்கள் இருந்தனர். குறிப்பாக பாரிஸ் வெளிநாட்டு மிஷன் சொசைட்டியின் போதகர்கள்,  Friars Minor அவையினர், சலேசியன் மற்றும்  பிரான்சிஸ்கனை சார்ந்த மாதாவின் ஊழியர்கள்.

ஜாவோ ராங் மற்றும் அவரது தோழர்கள் 87 சீன கத்தோலிக்கர்கள் மற்றும் 33 மேற்கத்திய மிஷினரிகள் அவர்கள் செய்த மறைபரப்பு பணிக்காக படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் Chi Zhuzi என்கிற 18 வயது சிறுவன் இருந்தான் அவனது வலது கையை துண்டித்த பொது அவன் அழுதுகொண்டே சொன்னது 
"எனது சதையின் ஒவ்வொரு துண்டும் எனது இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் நான் கிறிஸ்துவன் என்று சொல்லும் "


AUGUSTINE ZHAO RONG


அகஸ்டின் ஜாவோ ரோங்கு

ஜாவோ ராங் போர், 1746ல் சிச்சுவான் உள்ள பேகன் இன பெற்றோருக்கு பிறந்தவர். 1785ல் அவரது 20 வயதில் அவர் இராணுவத்தில் சேர்ந்தார். 

அவர் 30 வது வயதில்தனது புனித அகஸ்டின் தினத்தில் ஞானஸ்நானம் பெற்றார்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முறைசாரா தனியார் பயிற்சி அவரை செமினரியில் பணியாற்றினார். அவரது இயக்குனராக இருந்த சீன போதகர்  திருச்சபையின் பிஷப்பிடம் (Pottier )அவரை பரிந்துரை செய்தார், 35 வயதான அகஸ்டீன் முறையாகவும் பொறுமையாகவும் தனது பணியை நிறைவேற்றினார். 

பிஷப் Pottier, அகஸ்டீனுடைய தைரியம், திறமை, பொறுப்பை கண்டு  அங்கீகரித்து அவருக்கு களப்பணியாக யுன்னானின் லோலோ என்கிற சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய பணிக்கப்பட்டார் . இது புதிய மற்றும் கடினமான பணியாகும்.

பேரரசர் Jiaqing கொடுமையான ஆட்சியின் போது அகஸ்டீன் கைது செய்யப்பட்டார். யுன்னான் மாகாண தலைநகர் Cheng-du க்கு கொண்டுசெல்லப்பட்டு அகஸ்டீனை நீதிபதி மதத்தின் பெயரால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டார். மேலும் அவரது கணுக்காலில் மூங்கிலால் 60அடிகளும், தோல் வாரினால் 80 அறைகளும் தண்டனையாக பெற்றார்.

ஒரு சில நாட்களுக்கு பின்னர் அவர் 27 ஜனவரி 1815 ல் சிறையில் இறந்தார்.



Friday, July 5, 2013

இல்லத்தரசிகளின் பாதுகாவலர் - புனித அன்னாள் "Guardian of housewives - St. Anna"

நமது பாதுகாவலர்கள் / Our Guardians



இல்லத்தரசிகளின் பாதுகாவலர் - புனித அன்னாள் 


Guardian of housewives - St. Anna


பாதுகாவல் - தச்சர்கள், குழந்தையில்லாத மக்கள், தாத்தா பாட்டி, இல்லத்தரசிகள், சரிகை தயாரிப்பாளர்கள், இழந்த கட்டுரைகள், சுரங்க தொழிலாளர்கள், தாய்மார்கள், பழைய துணிகளை விநியோகஸ்தர், வருமயிலுல்ளோர், கர்ப்பம் தரித்தோர்.


இயேசு கிறிஸ்துவின் பாட்டி, கன்னி மேரியின் அம்மா. அவரது கணவர் ஜோசிம் என்று மட்டுமே தெரிகிறது. இவரது பெயருக்கு ஆதரவு அல்லது கருணை என்று பொருள்.

Tuesday, July 2, 2013

Sacred heart cathedral church feast, Thanjavur.

தஞ்சை மறைமாவட்ட திரு இருதய ஆண்டவர் திருவிழா துளிகள் 












விமரிசையாய் கொண்டாடப்பட்ட திரு இருதய ஆண்டவர் திருவிழாவில் மறுநாள் திவ்ய  நற்கருணை பவனி நடைபெற்றது (அதில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை ) ஆயினும் உருவங்களை கொண்டாடுவதை தவிர்க்வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அதற்க்கு பதில் நற்கருணை நாதரை இன்னும் அதிகமாய் கொண்டாடலாமே ! 

ஏனென்றால்  யாத்திராகமம் - அதிகாரம் : 20ல்  ஆண்டவர்  இப்படி சொல்கிறார் 

  4. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொருபதையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.

 23. நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம். )

Thursday, June 27, 2013

ஜூன் மாதம்24 ம் தேதி திருவிழா


ஜூன் மாதம்24 ம் தேதி

புனித திருமுழுக்கு யோவான் பிறப்பு

Nativity of Saint John the Baptist, Prophet

ஜூன் மாதம்3 ம் தேதி திருவிழா


ஜூன் மாதம்3 ம் தேதி

புனிதர்கள் சார்லஸ் லுவாங்கா,தோழர்கள்மறைச்சாட்சியர்
Charles Lwanga and his companions

புனிதர் சார்லஸ் லுவாங்கா, காரோலி லுவாங்கா என்றும் அழைக்கப்பட்டார். (1860[1][2] or 1865–June 3, 1886)
உகாண்டா தென் பகுதியில் (Buganda)  பிறந்தார் 
கதோலிக்க உபதேசியராக இருந்த இவர் துறவியாக போற்றப்பட்டதாலும் இவர் தம் விசுவாசத்தின் உறுதியாயிருந்த காரணத்தாலும் 1885 - 1887 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கொல்லப்பட்டார் .இவரோடு இவருக்கு நெருக்கமானவர்களும் கொல்லப்பட்டனர்.

ஜூன் மாதம்5ம் தேதி திருவிழா


ஜூன் மாதம்5ம் தேதி



புனித போனிப்பாஸ் ஆயர், மறைச்சாட்சி

Saint Boniface, Bishop, Martyr

ஜூன் மாதம்6 ம் தேதி திருவிழா


ஜூன் மாதம்6 ம் தேதி



புனித நார்பெர்ட் ஆயர், மறைச்சாட்சி
Saint Norbert, Founder and Bishop

ஜூன் மாதம்9ம் தேதி திருவிழா


ஜூன் மாதம்9ம் தேதி



புனித எபிரேம் திருத்தொண்டர், மறைவல்லுநர்
Saint Ephrem, Doctor of the Church

ஜூன் மாதம்11ம் தேதி திருவிழா

ஜூன் மாதம்11ம் தேதி



புனித பர்னபா திருத்தூதர்
Saint Barnabas, Apostle

ஜூன் மாதம்13ம் தேதி திருவிழா


ஜூன் மாதம்13ம் தேதி 



பதுவா நகர் புனித அந்தோனியார் மறைப்பணியாளர், மறைவல்லுநர்
Saint Anthony of Padua, Doctor of the Church and Miracle-Worker

ஜூன் மாதம்19 ம் தேதி திருவிழா

ஜூன் மாதம்19 ம் தேதி

புனித ரோமுவால்து ஆதீனத் தலைவர்

Saint Romuald, Founder and Abbot



ஜூன் மாதம்21 ம் தேதி திருவிழா

ஜூன் மாதம்21 ம் தேதி

புனித அலோசியுஸ் கொன்சாகா துறவி

Saint Aloysius Gonzaga



ஜூன் மாதம்22 ம் தேதி திருவிழா

ஜூன் மாதம்22 ம் தேதி



புனித பவுலீனு நோலா
Saint Paulinus of Nola, Bishop, Confessor

புனிதர்கள் ஆயர் ஜான் பிசர்,

 தாமஸ் மூர் துறவிமறைச்சாட்சியர்
Saint Thomas more

ஜூன் மாதம் 27 ம் தேதி திருவிழா

ஜூன் மாதம்27 ம் தேதி



அலெக்சாந்திரிய நகர் புனித சிரில் ஆயர், மறைவல்லுநர்

St. Cyril of Alexandria, Doctor of the Church

ஜூன் மாதம் 28 ம் தேதி திருவிழா


ஜூன் மாதம்28 ம் தேதி

புனித இரனேயுஸ் ஆயர், மறைச்சாட்சி.


Saint Irenaeus, Doctor of the Church
130-202

Feast : June 28 (Roman Catholic Church, Anglican Communion)
August 23 (Eastern Orthodox Church)

இரனேயுசை  அவரது இளம் வயது  முதலே அப்போஸ்தலரான புனித அருளப்பரின் சீடரான  பொலிக்கார்ப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். 

குரு பட்டம் பெற்றபின் அவர்தமது மறையுரைகளை கேட்டு அநேகர்  மனம் திரும்பினர். 

வேதகலகம் தொடங்கிய நாட்களில் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்துவை பரப்பினவர்களையும்  கொடூரமாக கொன்றனர். அவ்வமயம் இவரும் கொல்லப்பட்டு மறைசாட்சியானர் .

Wednesday, June 26, 2013

ஜூலை மாதம்31 தேதி திருவிழா




புனித லொயோலா இஞ்ஞாசி மறைப்பணியாளர்

ஜூலை மாதம்30 தேதி திருவிழா





புனித பீட்டர் கிறிசோலோகு ஆயர், மறைவல்லுநர்

ஜூலை மாதம்29 தேதி திருவிழா





புனித மார்த்தா

ஜூலை மாதம்26 தேதி திருவிழா



புனிதர்கள் யோவாக்கீம், அன்னா தூய மரியாவின் பெற்றோர் 

Saint Joachim, Father of the B.V. Mary , Saint Anne - Mother of Mary

ஜூலை மாதம்25 தேதி திருவிழா




புனித யாக்கோபு திருத்தூதர்

ஜூலை மாதம்24 தேதி திருவிழா



புனித சார்பெல் மாக்லுப் மறைப்பணியாளர்