முக்கிய ஜெபங்கள்
மூவொரு கடவுள் புகழ் (தமத்திரித்துவத்தின் தோத்திரம்) :
பிதாவுக்கும் சுதனுக்கும்; பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்
சிலுவை அடையாளம்:
பிதாவுக்கும் சுதனுக்கும்; பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்
புனித சிலுவை செபம்:
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் :
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தின்மை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.
திவ்ய நற்கருணை ஆராதனை :
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு சதா காலமும் ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.
விசுவாச பிரமாணம்:
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
அர்ச்சீஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.
உத்தம மனஸ்தாப செபம்:
சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறறேன். எனக்கிதுவே மனத்தாபமில்லாமல் வேறு மனத்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லையென்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்கு பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்த பலன்களை பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். -ஆமென்.
சுருக்கமான உத்தம மனஸ்தாப செபம்:
என் சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் என் பாவங்களால் உமக்கு செய்த துரோகத்திற்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன். இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்ப்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன். -ஆமென்
பாவ சங்கீர்த்தன செபம்:
எல்லாம் வல்ல சர்வேசுரனிடமும் எப்பொழுதும்த கன்னியான பரிசுத்த மரியாயிடமும் அதிதூதரான புனித மிக்தேலிடமும் ஸ்னாபகரான புனித அருளப்பரிடமும் அப்போஸ்தலரான புனித இராயப்பர் சின்னப்பரிடமும் புனிதர் எல்லோரிடமு; தந்தையே உங்களிடமுமு; நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன். எனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என்பாவமே என்பாவமே என் பெரும் பாவமே ஆகையால் எப்பொழுதும் கன்னியான பரிசுத்த மரியாயையும் அதிதூதரான புனித மிக்கேலையும் ஸ்னாபகரான புனித அருளப்பரையும் அப்போஸ்தலரான புனித இராயப்பர் சின்பை;பரையும் புனிதர் எல்லோரையும் தந்தையே உங்களையும் நம் ஆண்டவராகிய சர்வேசுரனிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன். -ஆமென்
காணிக்கை ஜெபம்:
இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும் அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும் கிரியைகளையும் படுந்துன்ப வருத்தங்களையும் தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.
இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.
உணவருந்துமுன் ஜெபம்:
சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்
உணவருந்திய பின் ஜெபம்:
சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.
இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.
ஜெபிப்போமாக
சர்வேசுரா சுவாமி! எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது -ஆமென்
வேலை துவங்குமுன் ஜெபம்:
தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஜெபிப்போமாக
சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும் அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.