போர்த்துகல் நாட்டு புனித எலிசபெத்து
St.Elizabeth
(1271 - 1336)
(1271 - 1336)
இவள் 12ஆம் வயதில் மணமுடித்தார். இவளுடைய கணவன் போர்த்துக்கல் நாட்டின் மன்னர். அவரை இவள் தன் செபத்தாலும் தூய வாழ்வாலும் மனந்திருப்பினாள். இவள் ஏழைகளுக்கு ஏராளமாக உதவி செய்வாள். பக்தி முயற்சிகளில் அதிக நேரத்தைச் செலவழிப்பாள். இவளுக்கு அதிக துன்பங்கள் வந்தது. இவளுடைய மூத்த மகன் தந்தைக்கு விரோதமாக குழப்பம் செய்தான். தன் மனைவி தன் மகன் பக்கமாகச் சார்ந்திருப்பதாக சந்தேகப்பட்டு தம் மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் அரசர் தமது குற்றத்தை உணர்ந்து அதற்குப் பரிகாரம் செய்தார். எலிசபெத்தின் பெரு முயற்சியால் தகப்பனும் மகனும் சமாதானம் ஆனார்கள்.
ஒரு நாள் இவள் ஏழைகளுக்குக் கொடுக்கும்படி பணத்தை மடியில் வைத்து மறைத்துக் கொண்டு போனாள். கணவரோ மடியை திறந்து பார்க்க, ரோஜா மலர்களையே அங்கு கண்டார். அப்பொழுது கடுங்குளிர் காலம். ரோஜா மலர்களையே பார்க்க முடியாத காலம். அதிலிருந்து தன் மனைவி ஏழைகளுக்கு பிரியம்போல் உதவி செய்ய விட்டு விட்டார். கணவன் இறந்த பிறகு தனது செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து ஏழைக் கிளாரம்மாள் சபை கன்னியர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாள். திருப்பலியுலும் திவ்விய நற்கருணை மீதும் இவளுக்கு அதிக பக்தி உண்டு. கடும் உபவாசம் இருந்தும் அன்புச் செயல்கள் செய்தும் திவ்விய நன்மை வாங்க தன்னை தயாரிப்பாள்.
No comments:
Post a Comment