Sunday, June 23, 2013

பத்து கட்டளைகள் "ten commandments"

பத்து கட்டளைகள்


சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து

( யாத்திராகமம் - அதிகாரம்  20 : 6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக !

( யாத்திராகமம் - அதிகாரம் : 20
   3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

  4. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொருபதையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.

   23. நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம். )


2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம் 20: 7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.)

3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க 
மறவாதிருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :
8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.


11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

5. கொலை செய்யாதிருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :13 )

6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :14 )

7. களவு செய்யாதிருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :15 )

8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :16 )

9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :17 )

10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயக !

( யாத்திராகமம் - அதிகாரம்  20 :17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.)

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது

2.தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

( மத்தேயு அதிகாரம் 22 : 
37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

38. இது முதலாம் பிரதான கற்பனை.

39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.


40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். )

No comments:

Post a Comment