புனித தோமா திருத்தூதர்
இந்தியாவின் பாதுகாவலர்
இந்தியாவின் பாதுகாவலர்
Saint Thomas, Apostle and Martyr
பிறப்பு - கிபி 1 (முற்பகுதி) கலிலேயா
இறப்பு - டிசம்பர் 21, 72-கிபி
திருவிழா - ஜூலை 3 (அக்டோபர் 6 அல்லது ஜூன் 30)
பாதுகாவல் - கட்டட கலைஞர்
தோமாவின் சந்தேகம்
இவரது இன்னொரு பெயர் திதிமுஸ். அதன் பொருள் இரட்டைப்பிள்ளை. இவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தவர். இவர் கல்வி கற்றவர் அல்ல. கள்ளம் கபடு அற்றவர். இயேசுவை அதிகம் நேசித்தார்.
லாசர் வியாதியாயிருக்கிறார் இயேசு யூதேயாவுக்குச் செல்ல முயன்றபோது அனைத்து சீடர்களும் அதற்கு எதிராகப் பேசினார்கள். அங்கிருந்த யூதர்கள் அவரைக் கல்லெறிந்த கொல்ல முயன்றதை நினைவூட்டி அங்கு செல்ல வேண்டாம் என்று கருத்து தெரிவித்தபோது, தோமையார் மட்டும் 'நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்' என்று ஏனைய சீடர்களிடம் சொன்னார். கடைசி இரவு உணவு முடிந்த பிறகு இயேசு சீடரை நோக்கி 'நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்த பின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்' என்றார். அப்போது தோமையார் 'ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க அங்கே போகும் வழி எப்படித் தெரியும்?' என்றார். இயேசுவோ நானே வழியும் உண்மையும் உயிரும் என்று கூறினார்.
இயேசு உயிர்த்தெழுந்த பின் தம் சீடர்களிடம் தோன்றுகின்றார். அப்போது தோமா அங்கில்லை. அவர்கள் தோமா வந்தபிறகு "ஆண்டவரை கண்டோம்" என்றார்கள். ஆனால் தோமாவோ ஒரு வலுவான ஆதாரம் துக்காலத்திற்கு ம் எதிரோலிக்கும் வண்ணம் இஆயசுவின் ஆணிகளின் தீம்பில் எனது கைவிரலை வட்டாலன்றி நான் நம்பமாட்டேன் என்மு உயிர் அலைகளை முன் வைக்கின்றார். இதை உணர்ந்த ஆண்டவர் தோமா கூடியிருந்தபோது அங்கே அவருக்கு தோன்றி தன் விலாவையும் கைகளையும் காட்டி எனது விலாவில் உன் கையை விடு என்றபோது தோமா "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசுவோ 'என்னைக் கண்டதால் விசுவாசம் கொண்டாய். காணாமல் விசுவசிப்பவர்கள் பேறு பெற்றவர்கள்' என்றார். "இயேசுவைப் பார்த்து நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்ற இவரது அறிக்கைதான் நற்செய்தி நூல்களில் நாம் பார்க்கும் முதல் விசுவாச அறிக்கை.
பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டபின் தோமையார் பல நாடுகளில் வேதம் போதித்தார். இந்தியாவுக்கு வந்து மைலாப்பூர் என்னும் இடத்தில் வேதத்திற்காக கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment