Wednesday, June 26, 2013

ஜூலை மாதம்6 தேதி திருவிழா

ஜூலை மாதம்6  தேதி  திருவிழா 


புனித மரிய கொரற்றி 
கன்னியர், மறைச்சாட்சி

(1890-1902)
பிறப்பு அக்டோபர் 16, 1890
இறப்பு ஜூலை 6 1902 (வயது 11)

திருவிழா ஜூலை 6
பாதுகாவல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், 
இளம் பெண்கள், நவீன இளைஞர்கள்

இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார்.

கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை வன்கலவியால் அடைய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே கத்தியால் பல முறை குத்தப்பட்டு இவர் இறந்தார். புது நன்மை வாங்கிய பிறகு ஐந்து வாரங்கள் கூட ஆகவில்லை . அலெக்சாண்ட்ரோ ஸெரனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான் . பாவத்துக்கு இணங்க மறுத்த மரிய கொரற்றியின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான் . 

"இது பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா அவனை எச்சரித்தும் பயனில்லை. 

குற்றுயிராய் விடப்பட்ட மரியா மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார் . “மன்னித்துவிட்டேன் அவரை”, என்று சொல்லிவிட்டு மரித்தார்.


Saint Maria Goretti
Virgin and Martyr

கொலை செய்ததற்காக அலெக்சாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. 

பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெக்சாண்ட்ரோ, மரியா கொரற்றி விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 

27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார்.
மரியா இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் புனிதர் பட்டம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெக்சாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர்.


No comments:

Post a Comment