நமது பாதுகாவலர்கள் / Our Guardians
பீடச்சிருவர்களின் பாதுகாவலர் - புனித ஜான் பெர்க்மான்ஸ்
Guardian for Altar boys - St. John Berkmans
புனிதரின் திருநாள் நவம்பர் 26
FEAST -November 26 (August 13)
Jesuit Seminarian
(1599-1621)
FEAST -November 26 (August 13)
Jesuit Seminarian
(1599-1621)
பீடச்சிறுவர்களாகிய பீடப்பூக்களுக்கு பாதுகாவலர் புனித பெர்க்மான்ஸ் அருளப்பர். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டிபெஸ்ட் என்னும் சிற்றூரில் கி.பி. 1599- ஆம் ஆண்டு பிறந்தார்.
பெர்க்மான்ஸ் இளம் வயதிலேயே இறைவனுக்குத் தொண்டாற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவர் அடிக்கடி “இந்த வயதில் நான் புனிதராகா விட்டால், எப்பொழுதும் புனிதனாக முடியாது” என்று சொல்லுவார். குருமடத்தில் சேர இவரது வீட்டில் பெற்றோரும் உற்றாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இறுதியில் இறைவனுக்கே நான் சொந்தம் என்று கூறி தமது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மேற்படிப்புக்காக உரோமை அனுப்பப்பட்ட போது அங்கு பிளேக் நோயினால் அவதியுற்று கி.பி. 1621-ஆம் ஆண்டு குருமாணவராக இருந்தபோதே இறைவனடி சேர்ந்தார்.
சில இடங்களில் நம் பங்குகளில் சிறுவர்கள் ஆர்வமுடனும், மகிழ்வுடனும் திருப்பலியில் குருக்களுக்கு உதவ முன் வருகிறார்கள். அவர்களைப் பாராட்டுவோம். அவர்களது முயற்சியை இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
மேலும் அறிந்துகொள்ள http://sureshreji.blogspot.in/2012/11/blog-post_7.html
சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட இறையழைத்தல் பணிக்குழுவின் ஓர் அங்கமான உயர் மறைமாவட்ட பீடப்பணியாளர் இயக்கம் பற்றி அறிந்துகொள்ள http://tnbcvocation.blogspot.in/2010/11/blog-post_27.html
No comments:
Post a Comment